3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சீனா அனுமதி

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது.
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சீனா அனுமதி
Published on

பீஜிங்

சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரமாகப் பயன்படுத்த இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடுப்பூசியை எந்த வயதினரிடமிருந்து தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை என சினோவாக் நிறுவனத் தலைவர் யின் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவாக் மற்றும் சினோபார்ம் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com