சீனா: மாணவர்கள் மீது கார் மோதல் - 5 பேர் பலி, 18 பேர் காயம்

சீனாவில், மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
சீனா: மாணவர்கள் மீது கார் மோதல் - 5 பேர் பலி, 18 பேர் காயம்
Published on

பீஜிங்,

சீனாவின் வட கிழக்கு பகுதியில் லியோனிங் மாகாணம் அமைந்துள்ளது. அங்கு ஜியான்சாங் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு சாலையை கடந்தனர்.

அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது பலமாக மோதியது. இதனால் மாணவ, மாணவிகள் அலறினர். பலர் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்18 பேர் படுகாயங்களுடன், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு விபத்தில் சீனாவில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com