சீனாவில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 47 பேர் காயம்

சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
சீனாவில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 47 பேர் காயம்
Published on

ஷென்யாங்,

சீனாவில் லையாவோனிங் மாகாணத்தில் ஷென்யாங்க் நகரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. 47 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இதுபற்றி வெளியான வீடியோவில், அந்த தெரு முழுவதும் கட்டிட இடிபாடுகள் பரவி கிடந்தன. இந்த வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளை தங்க வைப்பதற்காக 36 ஓட்டல்களை அரசு அதிகாரிகள் தயார் செய்து வைத்து உள்ளனர். நடப்பு ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வாயு வெடிவிபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். 138 பேர் காயமடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com