சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1% அதிகரிப்பு

சீன பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1 சதவீதம் அதிகரித்து ரூ.17.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
Image courtesy: businessinsider
Image courtesy: businessinsider
Published on

பெய்ஜிங்:

உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

2021-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டை 6.8 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி இருந்தது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த 2022 ஆம் ஆண்டுக்கான சீனா பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1 சதவீதம் அதிகரித்து உள்ளது. 230 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது). சீன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகமானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com