ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை அனுப்பிய சீனா

ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை சீனா அனுப்பியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

விண்வெளித்துறையில் சாதனை படைத்துள்ள அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் போட்டி போட்டு வருகிறது. அதன்படி சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த சீன விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2டி என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த ராக்கெட் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் வணிக தொலையுணர் சேவைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை சரிபார்க்க பயன்படுத்தப்படும் என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com