எதிரிகளை தாக்கி அழிக்க தற்கொலைப்படை நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் சீனா

எதிரிகளை தாக்கி அழிக்க தற்கொலைப்படை நீர்மூழ்கிக் கப்பலை சீனா தயாரிக்கிறது.
எதிரிகளை தாக்கி அழிக்க தற்கொலைப்படை நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் சீனா
Published on

எதிரிகளை தாக்கி அழிக்க மனிதர்களற்ற தற்கொலைப்படை நீர்மூழ்க்கிக் கப்பலை சீனா தயாரிக்கிறது. கமிகஸி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வரும் 2020ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் குறைந்த செலவில் டீசல் மற்றும் மின்னாற்றலால் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு ஆயுதங்கள் நிரப்பப்பட்டு செயற்கைக் கோள் உதவியுடன் கடல் வழிப் பயணம் மேற்கொள்ளும் கமிகஸி எதிரி நாட்டுக் கப்பல்களை நேருக்கு நேர் மோதி அழித்து விட்டு தானும் அழிந்து போகும் தன்மை கொண்டது. ஆழத்தில் செல்லும் போது கடல்சேற்றில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இந்த நீர்மூழ்கிக் கப்பலை மனிதர்கள் யாரும் இயக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com