இலங்கைக்கு ரூ.500 கோடி மருந்துகள் வழங்க சீனா உறுதி

இலங்கைக்கு ரூ.500 கோடி மருந்துகள் வழங்க சீனா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கைக்கு விரைவில் ரூ.500 கோடி மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதர் கி ஷென்கோங் தெரிவித்துள்ளார்.

சமீப ஆண்டுகளில் இலங்கைக்கு பெருமளவிலான மருத்துவ உதவியை வழங்கும் நாடாக சீனா விளங்குகிறது.

கொரோனா காலத்தில் இலங்கைக்கு அதிகளவில் தடுப்பூசிகள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சோதனை உபகரணங்களை சீனா வழங்கியது. அது பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இலங்கை வெல்ல உதவியது என சீன தூதர் கூறினார்.

சீனா அதன் 50 கோடி யுவான் அவசரகால மனிதாபிமான உதவி திட்டத்தின்கீழ் ரூ.120 கோடி மதிப்பிலான மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அளித்துள்ளது. வருகிற மாதங்களில் வழங்கப்படவுள்ள ரூ.500 கோடி மதிப்புள்ள மருந்துகள், நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும், நோயாளிகளுக்கும் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு சீன தூதர் கி ஷென்கோங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com