சீனா: பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்; விசாரணைக்கு உத்தரவு

சீனாவில் பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளின் பாட புத்தகத்தில் இடம் பெற்ற ஆபாச படங்கள் சர்ச்சையாகி நாடு முழுவதிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சீனா: பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்; விசாரணைக்கு உத்தரவு
Published on

பீஜிங்,

சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கான பாட புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தது பெருத்த சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் சினா வெய்போ போன்ற சமூக ஊடக தளத்தில் நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்து தங்களது விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

அந்த பாட புத்தகத்தின் சில காட்சிகள் குழந்தைகளை மையப்படுத்தி வரையப்பட்டு உள்ளன. அதில், சிறுவர், சிறுமிகளின் ஆபாச நிலையிலான காட்சிகள், நாக்கு வெளியே தள்ளி கொண்டும், கோணலான வாய், ஓரப்பார்வை உள்ளிட்டவற்றுடன் சிறுவர்கள் தோன்றும் காட்சிகளும், சிலர் அமெரிக்க தேசிய கொடியை ஆடையாக அணிந்தபடி உள்ள காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, சில சர்ச்சைக்குரிய ஆபாச காட்சிகள் இடம் பெற்ற ஓவியங்களும் உள்ளன.

இதனால், பாட புத்தகம் வெளிவருவதற்கு முன்பு முறையாக, படித்து பார்க்கப்படாமலும் மற்றும் மறுஆய்வு செய்யப்படாமலும் இருந்துள்ளது என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது.

இதுபற்றி பள்ளி பாடபுத்தகங்கள் மீது ஆய்வு நடத்தும்படி சீன கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய, அசிங்க, இனரீதியான மற்றும் ஆபாச படங்களை கொண்ட புத்தக வெளியீட்டாளர்களிடம் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com