டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு, ஜப்பான் ஆதரவு சீனா கண்டனம்

டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவுக்கு தெரிவித்த ஜப்பானுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு, ஜப்பான் ஆதரவு சீனா கண்டனம்
Published on

புதுடெல்லி,

டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்தியாவுக்கான, ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு நிருபர்களிடம் கூறியதாவது:

டோக்லாம் பகுதி, சீனா மற்றும் பூடான் இடையேயான பிரச்சினைக்கு உரியது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இதனை இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன. அந்த பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலையை, எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக முடிவு செய்து மாற்றக்கூடாது. பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். சூழ்நிலையை ஜப்பான் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பூடானுடனான இரு தரப்பு ஒப்பந்தம், மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு உள்ளது. இதனை சுஷ்மா தெளிவாக கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, டோக்லாமில் உள்ள நிலை குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளாமல் ஜப்பான் இதைப்பற்றி கருத்து தெரிவிக்கக்கூடாது என கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com