

பெய்ஜிங்,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் குறித்து கூறுகையில், இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை "வரலாற்று சூழல் சிக்கலானது" என்றும் தற்போதைய நிலைமை எல்லா வகையான காரணிகளாலும் ஏற்படுகிறது .
சம்பந்தப்பட்ட தரப்பினர் அமைதிக்கான கதவை மூடிவிட மாட்டார்கள். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும், மேலும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் தீக்கு எரிபொருளைச் சேர்ப்பதாக அவர் கூறினார்.
கடந்த வாரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் நெருக்கடியை அதிகப்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டியது, சீனாவின் அதிகாரபூர்வ ஊடகங்கள் தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷியாவின் முழுத் தாக்குதலையும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்திய வாசகமான "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று அழைத்து வருகின்றன.