சீனாவில் புதிதாக 2,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் புதிதாக 2,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 7,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதுவரை சீனாவில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் என அனைத்து பாதிப்புகளின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சீன சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இனி அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யப்போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,291 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,235 ஆக உள்ளது. சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,69,918 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com