சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- அறிகுறிகள் இல்லாமல் 28 பேருக்கு புதிதாக தொற்று

சீனாவில் அறிகுறிகள் எதுவும் இன்றி புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- அறிகுறிகள் இல்லாமல் 28 பேருக்கு புதிதாக தொற்று
Published on

பெய்ஜிங்,

உலகம் முழுவதும் உக்கிர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரில்தான் வெளிப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பரவலைக் கண்டறிந்த சீனா, கடுமையான நடவடிக்கைகளால் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலாக கொரோனா பரவிய உகான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் மாகாணம் முழுவதும் உள்ள சுமார் 11 கோடி மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீனா திட்டமிட்டு, அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சூழலில், கடந்த சில தினங்களாக அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

எனினும், புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் சீனாவில் இருந்தவர்கள் இல்லை எனவும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் எனவும் சீன சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. ஹூபெய் மாகாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் என்று சீனா சுகாதாரத்துறை தெரிவித்தது. ஹூபெய் மாகாணத்தில் மொத்தம் 295 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,971 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 4,634- பேர் பலியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com