கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம்பேர் குணமடைந்ததாக சீனா தகவல்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம்பேர் குணமடைந்ததாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம்பேர் குணமடைந்ததாக சீனா தகவல்
Published on

பீஜிங்,

சீனாவில், கொரோனா வைரசால் 81 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது, 5 ஆயிரத்து 120 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா முதலில் தோன்றிய ஹுபேய் மாகாணத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com