அருணாச்சல பிரதேசம் எங்களது நாட்டின் ஒரு பகுதி: சீனா திட்டவட்டம்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் தற்போது வரை எந்தவித மாற்றமும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் எங்களது நாட்டின் ஒரு பகுதி: சீனா திட்டவட்டம்
Published on

பெய்ஜிங்,

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக சீனா பல புதிய பெயர்ளை சூட்டி வருகிறது. இவை முற்றிலும் ஏற்க முடியாதவை என்று கூறி வரும் இந்தியா, சீனாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இவ்வகையாக செயல்பாடுகள் இருநாட்டு உறவை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாதிக்கக்கூடும் என்றும் இந்தியா எச்சரித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்தியப் பகுதிகளுக்கு சீனா தரும் கற்பனை பெயர்களை இந்தியா தெளிவாக நிராகரிக்கிறது" என்று கூறினார். இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகும். "அருணாச்சல பிரதேசம் (சீனாவில் 'சாங்நான்' என அழைக்கப்படுகிறது) எங்கள் நாட்டின் ஒரு பகுதியாகும்; அந்தப் பகுதியில் உள்ள இடங்களுக்கு பெயர் வழங்குவது சீனாவின் அதிகாரப் பரப்பிற்குள் வருகிறது" என்றும் கூறினார்.

தற்போது இருநாடுகளும் உறவை மேம்படுத்தும் நோக்கில் ஒரே திசையில் செயல்பட வேண்டும் என்றும், இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் தற்போது வரை எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com