தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு


தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
x

கோப்புப்படம்

தைவான் எல்லையில் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது.

தைபே நகரம்,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.

அதன்படி கடந்த ஒரு நாளில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் தைவான் எல்லையில் கண்டறியப்பட்டன. அவற்றில் 60 விமானங்கள் எல்லையைக் கடந்து தங்களது வான்பகுதியில் பறந்து சென்றதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இதனால் தைவான் எல்லையில் போர்ப்பதற்றம் தீவிரம் அதிகரித்துள்ளது.

தைவானின் பாதுகாப்பு அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டபடி, வியாழக்கிழமை பிற்பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வரை ஏன் இவ்வளவு விமானங்கள் சீறிப்பாய்ந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை. விமானங்கள் இரண்டு தனித்தனி பிரிவுகளாக அனுப்பப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story