சீனா: சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; வெளியான பரபரப்பு வீடியோ காட்சி

ஷாங்காய் மாகாணத்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு நிலவியது.
சீனா: சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; வெளியான பரபரப்பு வீடியோ காட்சி
Published on

ஷாங்காய்,

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மின்ஹாங் மாவட்டத்தில் உள்ள சாலையின் ஒரு பகுதி கண நேரத்தில் உடைந்து மண்ணுக்குள் சரிந்தது. அருகிலிருந்த வாகனங்கள் மற்றும் மக்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மெட்ரோ பணிகள் மற்றும் நீர் கசிவு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் சம்பவத்தின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

ஷாங்காய் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு குறித்த தற்போதைய கவலைகளை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com