

அமெரிக்காவின் வர்த்தக பலன்களை பெற்றபோதிலும், வட கொரியா மிரட்டல் விவகாரத்தில் சீனா எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
வட கொரியா நாடும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், டிரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் சீன வர்த்தக துணை மந்திரி கியான் கெமிங் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், வட கொரிய அணு ஆயுத விவகாரம் மற்றும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு ஆகியவை இரு வெவ்வேறு விவகாரங்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன அல்ல. அந்த இரு விவகாரங்களும் ஒன்றாக விவாதிக்கப்பட கூடாது என்று கூறியுள்ளார்.