சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி

சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி
Published on

ஷாங்காய் ,

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் சுவர் உடைந்து கீழே விழுந்தது. இதில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் இன்று காலை 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com