'சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே' உலக சுகாதார நிறுவனம் கருத்து

சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
'சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே' உலக சுகாதார நிறுவனம் கருத்து
Published on

ஜெனீவா,

சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பல நாடுகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.அந்த வகையில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன.

இதை உலக சுகாதார நிறுவனம் நியாயப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நேற்று காணொலிக்காட்சி வழியாக பேட்டி அளித்தபோது, " சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத்தக்கவை" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com