தோகா லாம் விவகாரத்தில் சீனா அசாதாரண முரட்டுத்தனம் காட்டுகிறது - வெளியுறவுச் செயலர்

வெளிவிவகார துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் கலந்துரையாடிய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் சீனா அசாதாரணமான முறையில் முரட்டுத்தனம் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
தோகா லாம் விவகாரத்தில் சீனா அசாதாரண முரட்டுத்தனம் காட்டுகிறது - வெளியுறவுச் செயலர்
Published on

புதுடெல்லி

இத்தகவலை நாடாளுமன்றக்குழுவில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.

தூதரக அளவிலான பேச்சுக்கள் மூலம் இறுக்கத்தை குறைக்க இந்தியா முயல்வதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் எல்லைகள் குறித்து தனித்தனி நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவர் எல்லைப்பகுதியை தவறாக விவரிக்கிறார்கள்; இந்தியா அதற்கு விளக்கம் தர முயன்று வருகிறது. இந்தியா தன் நிலைப்பாட்டை 1895 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஆங்கிலோ-சீன உடன்படிக்கையின்படியே கொண்டிருக்கிறது என்றார்.

சீனாவின் ஆக்கிரமிப்பும் , பேச்சும் அசாதாரணமானது ஆனால் சில தரப்புக்களால் சொல்லப்படுவது போல் சிக்கலமானது இல்லை என்றார். தூதரக அளவில் தொடர்ந்து சீனர்களுடன் பேசிவோம் என்றார் ஜெய்சங்கர்.

வெளியுறவுத் துறை செயலர் உரையாடலின் எச்சமயத்திலும் போர் சூழல் நிலவுவதாக கூறவில்லை. அவர் கருத்து மோதல் என்றே குறிப்பிட்டதாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்தியா பூடானிற்கு உதவ முடியாது என்பதை சுட்டிக்காட்டும்படி செயல்படுகிறதா என்று கேட்டதாகவும் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் குழுவின் தலைவர் சஷி தரூர் உட்பட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com