”வட கொரியா மீதான தடைகளை சீனா அமல் செய்யும்” - வாங் யீ

தனக்கு கடும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும் சீனா ஐநா விதித்துள்ள தடைகளை பின்பற்றும் என்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லீ.
”வட கொரியா மீதான தடைகளை சீனா அமல் செய்யும்” - வாங் யீ
Published on

பெய்ஜிங்

சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலான ஐநா தீர்மானத்தை வட கொரியா சந்திக்க வேண்டியுள்ளது. சீனாவே வட கொரியாவின் ஒரேயொரு வர்த்தகம் செய்யும் நாடு. இப்புதிய தீர்மானம் சீனாவும், இதர உலக நாடுகளும் வட கொரியாவின் ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான மனோநிலையையே எடுத்துக் காட்டுகின்றன என்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ.

பன்னாட்டு அளவில் அணு ஆயுதம் பரவாமல் இருக்கவும், பிரதேச அமைதியையும், நிலைத்ததன்மையையும் பாதுகாக்கவும் சீனா முழுமையாகவும், கடுமையாகவும் இந்தத் தீர்மானத்தை அமல் செய்யும் என்றார் வாங் யீ. ஆயினும் சாதாரணமான அளவில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்திற்கு இதனால் பாதிப்பு வரக்கூடாது என்றும், சாமான்யமக்களும் இதனால் பாதிக்கப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்தீர்மானத்திற்கு ஆதரவாகவுள்ள உலக நாடுகளை பாராட்டினார். வட கொரியாவுடனும் அமெரிக்கா பேசத் தயாராக உள்ளோம். இதைப்பற்றி வட கொரியாவின் அதிபர் கிம் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

சீனாவின் வெளியுவுத் துறை அமைச்சர் வாங் யீ முன்பு ஆறுநாடுகள் இணைந்து பேசி வந்ததை மீண்டும் துவங்க வேண்டும் என்றார். இந்த அம்சம் புதிய தீர்மானத்திலும் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com