‘குவாட்’ அமைப்பு ஆசியாவின் நேட்டோ - சீனா சாடல்

‘குவாட்’ அமைப்பு ஆசியாவின் நேட்டோ என்று சீனா கூறியுள்ளது.
‘குவாட்’ அமைப்பு ஆசியாவின் நேட்டோ - சீனா சாடல்
Published on

பீஜிங்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதற்கான முக்கிய காரணம் நேட்டோ ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

உக்ரைன் தங்கள் அமைப்பில் இணைய முழு ஆதரவு தெரிவித்த நேட்டோ, போர் தொடங்கிய பின்னர் உக்ரைனுக்கு எந்த உதவியையும் வழங்காமல் நழுவி வருகிறது.

இதனிடையே இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள குவாட் அமைப்பை சீனா ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வரும் நிலையில், தற்போது குவாட் அமைப்பை ஆசியாவின் நேட்டோ என கூறி சாடியுள்ளது.

பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியுறவு மந்திரி வாங் யி இதுபற்றி கூறியதாவது:-

குவாட் அமைப்பின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் பேரழிவு முயற்சிகள் ஆகும். பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் சாக்குப்போக்கின் கீழ் அமெரிக்கா புவிசார் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறது. இது பிராந்திய ஒத்துழைப்புக்கான விருப்பங்களுக்கு எதிரானது மற்றும் எதிர்காலம் இல்லாதது. சீனாவை அடக்குவதற்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை தயார் செய்கிறது.

குவாட் அமைப்பின் உண்மையான நோக்கம் ஆசியாவின் நேட்டோவை உருவாக்குவதாகும். நேட்டோ விரிவாக்கம்தான் உக்ரைன் மீது ரஷிய படையெடுக்க காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com