

பெய்ஜிங்,
இந்தியாவுக்கு போட்டி நாடாக விளங்கும் சீனா, உலக அளவில் பொருளாதார ரீதியிலும் படை வலிமையிலும் தன்னை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ரேடாரால் கண்டுபிடிக்க முடியாதத் தொழில் நுட்பம் கொண்ட, அதிநவீன ஜே-20 ரக விமானங்களை சீனா தனது விமானப் படைச் சேவையில் சேர்த்துக் கொண்டுள்ளது. முற்றிலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விமானத்தை இணைத்துக் கொண்டதன் மூலம், பிராந்திய வான்வெளியில் தனது முன்னணி ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதாக சீன அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில், அமெரிக்கா மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்களை படைச் சேவைக்குப் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது சீனாவின் ஜே-20 விமானங்களும் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வான்வெளி படை பலச் சமநிலை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ரஷியாவுடன் இணைந்து எஃப்ஜிஎஃப்ஏ என்ற ரேடார் கண்களை மறைக்கும் அதிநவீன விமானங்களை இந்தியா மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #TamilNews