எதிர்ப்புக்கு மத்தியில் மியான்மர் வந்தார் சீன வெளியுறவு மந்திரி

சீனா நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யி, மியான்மர் நாட்டிற்கு வருகை தருவதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பர்மா,

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார்.இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.

சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

மீகாங் டெல்டா பகுதியில் நீர்மின்சாரத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் ஏற்படும் சுற்றுசுழல் பாதிப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். சீனா மீகாங்கின் மேல் பகுதியில் 10 அணைகளை கட்டியுள்ளது, அந்த பகுதியை அது லாங்காங் என்று அழைக்கிறது.

இது தொடர்பாக மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், மியான்மர் நாட்டில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகும். என அவர் தெரிவித்தார்.

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com