சீனாவில் பரவும் புதிய நோய் அவசர நிலை பிரகடனம்

சீனாவில் பரவும் புதிய நோயால் நான்காம் கட்ட அவசர நிலையை தற்போது பிரகடப்படுத்தியுள்ளனர்
சீனாவில் பரவும் புதிய நோய் அவசர நிலை பிரகடனம்
Published on

பீஜிங்

சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் மாவட்டத்திலேயே ஒரு சிறுவன் புபோனிக் பிளேக் தொற்றுக்கு இலக்கானதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவனுக்கு வியாழக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவருக்கு ஏற்கனவே ஆன்டிபயாடிக் வழங்கப்பட்டதால் புபோனிக் பிளேக் உறுதிப்படுத்தல் தாமதமானது, இது ஆரம்ப மாதிரிகளில் நோயறிதலை கடினமாக்கியது.

தேசிய சுகாதார அமைப்பானது சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகளிலேயே அந்த பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் பாதிப்பை உறுதி செய்தனர். மட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் இப்பகுதியில் எலி தொடர்பான கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து நான்காம் கட்ட அவசர நிலையை தற்போது பிரகடப்படுத்தியுள்ளனர்.சீனாவின் வடக்கு அண்டை நாடான மங்கோலியா அதன் மொத்த 21 மாகாணங்களில் குறைந்தது 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆகஸ்டில், சீன பிராந்தியமான மங்கோலியாவின் ஒரு பகுதியில் புபோனிக் பிளேகால் ஒருவர் இறந்த நிலையில் அதிகாரிகள் ஒரு கிராமம் முழுவதையும் மூடிவிட்டனர். பிளேக் நோயானது இதுவரை மனித குலம் எதிர்கொண்டதில் மிகவும் ஆபத்தான பெருந்தொற்றாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் ஆன்டிபயாடிக் மருந்துகளின் வருகையை அடுத்து பிளேக் பெருந்தொற்று முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் சமீக காலத்தில் பிளேக் மீண்டும் பரவலாக காணப்பட்டு வருகிறது என்பதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com