அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். காணொலி வாயிலாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பேச்சு
Published on

பெய்ஜிங்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த உரையாடலின் போது, போரில் யாருக்கும் விருப்பம் இல்லை என்றும் சர்வதேச பொறுப்புகளில் இரு நாடுகளும் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்றும் ஜி ஜிங்பிங், ஜோ பைடனிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின் போது, ரஷிய அதிபர் புதின் குறித்து நேரடியாக எதுவும் விமர்சனங்களை ஜின்பிங் முன்வைத்தாரா என்பது பற்றி தெளிவாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல், ரஷியாவுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்து குரல் கொடுப்பது குறித்தும் ஜி ஜிங்பிங் எதுவும் பேசினாரா? என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com