பாகிஸ்தான் ஊடகங்களின் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது சீனா கண்டனம்

சீனா நடத்திய ராக்கெட் தாக்குதலில், 160 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்களின் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களின் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது சீனா கண்டனம்
Published on: 


பீஜீங்

பாகிஸ்தானின் 'டான்' உள்ளிட்ட மீடியாக்கள் இந்தியாவுக்கு எதிராக விஷமச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எல்லைப் பகுதியில் சீனா நடத்திய ராக்கெட் தாக்குதலில், 160 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக செய்திகளை வெளியிட்டன.

துனியா நியூஸ் டி.வி என்ற தொலைக்காட்சியும் , பாகிஸ்தான் டிரிப் தொலைகாட்சியிலும் போலிக் காட்சிகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பியது. தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் உடல்களைக் கொண்டுசெல்வது போலவும் காயமடைந்தவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டன.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பாகிஸ்தான் மீடியாக்கள் பரவவிட்டு வருகின்றன. என கூறினார்.

பாகிஸ்தான் ஊடகங்களின் ஆதர மற்ற இத்தகைய செய்திகளுக்கு சீனா ஊடகங்கள் கண்டன தெரிவித்து உள்ளன.

இது குறித்து சீனாவின் அதிகார பூர்வ ஊடகம் வெளீயிட்டு உள்ள தகவலில் பாகிஸ்தான் ஊடகங்கள், வெளியீட்டு உள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது.என கூறி உள்ளது.

சீனாவின் தேசிய பத்திரிகை குளேபல் டைம்ஸ் செவ்வாயன்று வெளீயிட்டு உள்ள அறிக்கையில் , பாக்கிஸ்தானிய ஊடக அறிக்கையை "நியாயமற்றது மற்றும் பேலியானது " என்று கூறியுள்ளது.

X