அமெரிக்காவில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு - சீன அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு - சீன அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பருவநிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க உள்ளனர். இந்த உச்சிமாநாட்டில் அடுத்த வாரம் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றுவார் என சீன அரசு தெரிவித்துள்ளது.

இம்மாநாட்டில் பருவ நிலை மாற்றம் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான நிதியுதவி துய எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். மேலும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வரும் நவம்பரில் நடைபெற உள்ள ஐ.நா.பருவ நிலை உச்சி மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com