பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம்
Published on

பீஜிங்

சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருகை தரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டத்தை நடத்துவதற்கு இந்தியாவுக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பு எல்லை நெருக்கடியால் பாதிக்கப்படாது என்று கூறி உள்ளது.

இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் நாங்கள் இந்தியாவை ஆதரிக்கிறோம், என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறி உள்ளார்.

மேலும் பொருளாதார ஒத்துழைப்பு, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களிடமிருந்து மக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், தகவல் தொடர்பு மற்றும் உரையாடலை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை பலப்படுத்தவும் நாங்கள் இந்தியா மற்றும் பிற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவோம் என கூறினார்.

பிரிக்ஸ் சந்திப்புக்கு முன்னர் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பிற முக்கிய உச்சிமாநாடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

தொற்று நோய் பரவலுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் வங்காள தேசத்திற்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள்ள இருக்கிறார். மேலும் மே மாதம் போர்ச்சுகலில் நடைபெறும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திலும், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அங்கு இந்தியா விருந்தினர் நாடாக அழைக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான தேதி குறித்த ஆரம்ப விவாதங்கள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லாவின் சமீபத்திய மாஸ்கோ பயணத்தின் போது நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com