

பெய்ஜிங்,
கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜிங்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.