சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு

ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு
Published on

டோக்கியோ,

ஜப்பான்-சீனா எல்லையில் சென்காகு தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியை டயோயு என பெயரிட்டு சீனாவும் உரிமை கொண்டாடுகிறது. எனவே ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் சீன கப்பல்கள் அங்கு அடிக்கடி அத்துமீறி நுழைவதாக ஜப்பான் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சென்காகு கடற்பகுதியில் சீன கப்பல்கள் சுமார் 350 முறை ஊடுருவியது கண்டறியப்பட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 216 நாட்கள் சீன கப்பல்கள் தொடர்ச்சியாக பயணித்ததாக ஜப்பான் கடலோர காவல்படை குற்றம்சாட்டி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com