அதிபர் தேர்தல் வெற்றி : டிரம்பை விட பைடன் முதிர்ச்சியுள்ளவராக இருப்பார்- சீன அரசு ஊடகங்கள் நம்பிக்கை

டிரம்பை விட முதிர்ச்சியுள்ளவராக இருப்பார் என பைடன் வெற்றிக்கு சீன அரசு ஊடகங்கள் எச்சரிக்கையுடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.
அதிபர் தேர்தல் வெற்றி : டிரம்பை விட பைடன் முதிர்ச்சியுள்ளவராக இருப்பார்- சீன அரசு ஊடகங்கள் நம்பிக்கை
Published on

ஹாங்காங்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு சீன அரசு செய்தி ஊடகங்கள் எச்சரிக்கையுடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளன, இரு நாடுகளுக்கும் இடையிலான வேகமாக மோசமடைந்து வரும் உறவுகளை அவர் சீர்படுத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளன.

வல்லரசு நாடுகளுக்கிடையேயான எதிர்கால பதற்றங்களைப் பற்றியும், அமெரிக்க ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தொடர்ந்து எச்சரித்து உள்ளன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நம்பிக்கையும், ஒத்துழைப்பும் குறைந்தன. ஒரு வர்த்தக போர் வெடித்ததால் இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த குற்றச்சாட்டுகளை சீனா மீது வைத்தது.

சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்கள் சமீபத்திய நாட்களில் டிரம்பையும் அமெரிக்காவையும் அதிகமாக விமர்சித்தன.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை பிடனின் வெற்றியை தொடர்ந்து சீனா எதிர்வினையை காட்டி உள்ளது. இது சீனா உறவை பலப்படுத்தும் முயற்சிக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

ஏற்கனவே பதற்றமான சீனா-அமெரிக்க உறவுகள், மற்றும் உயர் மட்ட தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கும் பரஸ்பர மூலோபாய நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன என்று சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி சீனாவின் குளோபல் டைம்ஸ் கட்டுரை எழுதி உள்ளது.

வெளிநாட்டு விவகாரங்களில் டிரம்பை விட பைடன் மிகவும் மிதமான மற்றும் முதிர்ச்சியுள்ளவராகஇருப்பார் என்று கூறி, இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடலாம், கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கலாம் என கூறி உள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கும் வர்த்தகப் போர் மற்றும் தைவானில் தீர்க்கப்படாத மோதல்களை குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டி உள்ளது.

தெற்கு மாகாணமான குவாங்டாங்கின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் சதர்ன் டெய்லி,பைடன் பெரும்பாலும் ரஷியாவை, அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவார். ஒன்று நிச்சயம், விஷயங்கள் முன்பு இருந்த நிலைக்கு ஒருபோதும் திரும்பாது". உலகம் முன்பு இருந்த உலகம் அல்ல என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com