இங்கிலாந்தில் வண்ண விளக்குகளுடன் பயணத்தைத் தொடங்கியது 'கிறிஸ்துமஸ் ரெயில்'

இரவு நேரங்களில் ‘கிறிஸ்துமஸ் ரெயில்’ ஒளிர்ந்தபடி தண்டவாளங்களில் ஊர்ந்து செல்லும் காட்சியானது கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
இங்கிலாந்தில் வண்ண விளக்குகளுடன் பயணத்தைத் தொடங்கியது 'கிறிஸ்துமஸ் ரெயில்'
Published on

லண்டன்,

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் இந்த பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், ஒளிரும் வண்ண விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 'கிறிஸ்துமஸ் ரெயில்' பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள டார்ட்மவுத் நீராவி ரெயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரெயிலானது, வண்ண வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த கிறிஸ்துமஸ் ரெயில், இரவு நேரங்களில் ஒளிர்ந்தபடி தண்டவாளங்களில் ஊர்ந்து செல்லும் காட்சியானது கண்களுக்கு விருந்தாக அமையும். அதன்படி நேற்று முதல் இந்த 'கிறிஸ்துமஸ் ரெயில்' தனது பயணத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 வாரங்களுக்கு இந்த ரெயில் சேவை பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com