வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சிஐஏ தலைமை அதிகாரி ரகசியமாக சந்தித்ததாக தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவின் சிஐஏ தலைமை அதிகாரி ரகசியமாக சந்தித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சிஐஏ தலைமை அதிகாரி ரகசியமாக சந்தித்ததாக தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் மைக் பாப்பியோ வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரகசியமாக சந்திந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஆனால் இது தொடர்பான செய்தி குறித்து பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. ஈஸ்டர் தினத்தன்று இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com