

வாஷிங்டன்
ஜூலை மாதத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா இம்மாதமும் சோதனை நடத்த வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார். அதிபர் டிரம்ப் ஏற்கனவே போருக்குத் தயாரான நிலையில் அமெரிக்கா இருப்பதாக தெரிவித்து விட்ட நிலையில் வட கொரியா ஆகஸ்ட் மத்தியில் குவாம் தீவு அருகே சென்று விழும்படி நான்கு மத்தியதூர ஏவுகணைகளை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளதாக வியாழன் அன்று கூறியது. குவாம் அமெரிக்காவின் நிலப்பரப்பிலிருந்து 7,000 கி.மீட்டர்கள் தொலைவில் உள்ளது. அத்தீவு அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அங்கிருந்த இரண்டு பி-1பி சூப்பர்சானிக் போர் விமானங்கள் வட கொரியாவிற்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் அமெரிக்கா சீனாவிடம் மேலும் அழுத்தங்களை வட கொரியாவின் மீது பிரயோகிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை சீனா சாதித்தால் அதனுடனான வர்த்தகத்தில் மேலும் சாதகமாக நடந்து கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
என்னைவிட அமைதியான முறையில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் என்றுள்ளார் டிரம்ப்.