அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். #USBankShoot
அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
Published on

சிகாகோ,

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தில் நேற்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 30 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்துக்குள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணி அளவில் புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? அவர் எதற்காக சுட்டார்? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com