

லண்டன்,
கார்டிப் நகரில், வேல்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கார்ன்வால் இளவரசி பமீவாவுடனும், நாடாளுமன்ற சபாநாயகர் எலின் ஜோன்சுடனும் பேசிக்கொண்டிருந்தார்.
அவர், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மாநாடு அடுத்த மாதம் கிளாஸ்கோ நகரில் நடைபெறுவது பற்றி பேசும்போது, பருவநிலை மாற்ற பிரச்சினை பற்றி பேசுகிறார்களே தவிர அவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்பது மிகவும் எரிச்சலூட்டுகிறது என கூறி உள்ளார்.
இந்த ஆடியோ சரிவர கேட்கவில்லை என்றாலும் கூட, பருவநிலை மாற்ற பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதில் ராணி இரண்டாம் எலிசபெத் அதிருப்தி அடைந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தி விட்டது.