கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு - அதிர்ச்சி சம்பவம்

,
பொகொடா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே (வயது 39) அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், முகுல் உர்பெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






