ஆணுறை, டூத் பிரஷ் வினியோகம்: மன்னிப்பு கேட்டது அமேசான்

ஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் செய்யப்பட்டதற்காக, அமேசான் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆணுறை, டூத் பிரஷ் வினியோகம்: மன்னிப்பு கேட்டது அமேசான்
Published on

வாஷிங்டன்,

அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனம் மூலமாக செல்போன் தொடங்கி வீட்டு உபயோக சாதனங்கள்வரை வாங்குவது அதிகரித்து வருகிறது. சமயங்களில் நாம் விரும்பி கேட்ட பொருள் ஒன்றாகவும், வினியோகம் செய்கிற பொருள் ஒன்றாகவும் இருப்பதுவும் நேரிடுகிறது.

இப்படித்தான் சமீபத்தில் பிளாக் பிரைடே அதிரடி தள்ளுபடி விற்பனையின்போது அமெரிக்காவில் 300 பவுண்ட் (சுமார் ரூ.28 ஆயிரம்) மதிப்பிலான ஆடம்பர கைக்கெடிகாரம் ஆர்டர் செய்தவர்களுக்கு ஆணுறை, டூத் பிரஷ் போன்ற பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது அமேசான் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அத்துடன் செலுத்திய பணத்தை அப்படியே திருப்பி தருவதாக கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com