உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்

உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்
Published on

லண்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்புக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது. இதில் பலர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com