துருக்கியில் புதிதாக 27,474 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் பலி

துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அங்காரா,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,474 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82,06,375 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 203 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 76 லட்சத்து 80 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,54,296 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com