பிரான்ஸ் நாட்டில் புதிதாக 34,895 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 176 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாரிஸ்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 34,895 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,58,680 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 176 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 98,750 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,09,787 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 46,50,143 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com