பிரேசிலில் புதிதாக 45,094 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,613 பேர் பலி

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பிரேசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரத்து 065 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,613 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,35,924 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,77,70,617 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 8,45,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com