பிரான்சில் புதிதாக 7,414 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாரிஸ்,

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 414 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 69 லட்சத்து 49 ஆயிரத்து 519 ஆக உள்ளது.

ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,16,002 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 66,26,528 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,06,989 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com