வங்காளதேசத்தில் புதிதாக 5,869 பேருக்கு கொரோனா

வங்காளதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 7.97 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் புதிதாக 5,869 பேருக்கு கொரோனா
Published on

டாக்கா,

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வங்காளதேசம் 31-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் புதிதாக 5,869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.78 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 108 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் வங்காளதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 7.97 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com