கொரோனா பாதிப்பு; துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்புகளால் துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு; துனிசியாவில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழப்பு
Published on

துனிஸ்,

வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் ஒரே நாளில் 5,624 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால் மொத்த பாதிப்பு 5,63,930 ஆக உயர்வடைந்து உள்ளது. எனினும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,57,597 ஆக உள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் 317 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,369 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதுவரை துனிசியாவில் மொத்தம் 21 லட்சத்து 54 ஆயிரத்து 63 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. துனிசியாவுக்கு 10 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சென்று சேரவுள்ளன.

வருகிற வாரங்களில் 50 லட்சம் துனிசியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அந்நாட்டு அதிபர் கயிஸ் சயீத், அவசரகால கூட்ட ஆலோசனை மேற்கொண்ட பின்பு கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com