

மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒரே நாளில் 9,671 பேருக்கு கொரோனா பாதிப்புகள் புதிதாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,58,916 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று ஒரே நாளில் 287 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இது ஏப்ரல் 9 ஆம் தேதிக்குப் பிறகு நாட்டின் இறப்பு எண்ணிக்கையில் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வு ஆகும்.
இதனால் மொத்த உயிரிழப்பு 29,122 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
பிலிப்பைன்சின் மணிலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலும் மற்றும் புதிய பாதிப்புகளும் காணப்படுகின்றன என்றும் தெரிவித்து உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.