சீனாவில் 21 பேருக்கு கொரோனா: வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள்

சீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் 21 பேருக்கு கொரோனா: வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள்
Published on

பீஜிங்,

சீனாவின் பிரதான பகுதியில் நேற்று முன்தினம் ஷாங்காயில் 10, குவாங்டாங்கில் 5, இன்னர் மங்கோலியாவில் 3, புஜியனில் 2, ஷாங்ஸியில் ஒருவருக்கு என 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்ட சீன தேசிய சுகாதார கமிஷன், இவர்கள் அனைவரும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் என கூறியது.

இப்படி வெளியிடங்களில் இருந்து வந்து தொற்று உறுதியானவர்களில் சிகிச்சைக்கு பின்னர் 2,638 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 185 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். யாரும் இறந்ததாக தகவல் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com