கலிபோர்னியாவில் 1,436 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

கலிபோர்னியாவில் 1,436 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் 1,436 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

அவர்களில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை ஊழியர்கள் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுபோல், கலிபோர்னியா மாகாணத்தில், டெர்மினல் தீவில் உள்ள மத்திய சிறையில் பாதி கைதிகளுக்கு, அதாவது 644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com