ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கொரோனா

அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கொரோனா
Published on

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,78,131 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி 2,191 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,06,332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு தற்போது 13 ஆயிரத்து 576 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com